Monday, October 28, 2013

RAJA RANI REVIEW IN TAMIL


FOR MORE VISIT,
YOUTUBE
http://goo.gl/I3LUsS
WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/
FACEBOOK
http://goo.gl/kkSxQb

“மௌன ராகம்” படத்தின் சாயல் கொஞ்சம் இருந்தாலும் இப்போதுள்ள தலைமுறைக்கு ஏற்றப்படி படம் இருக்கிறது.
இயக்குனர்:
“அட்லி” தனது முதல் படம் என்பது தெரியாத வகையில் படத்தை இயக்கியுள்ளார். நாட்டிற்கு எதாவது சொல்ல வேண்டும் என்ற தன் குரு ஷங்கரின் வழியை பின்பற்றி உள்ளார். படம் முழுவதும் ரசிகர்களை வேறு எந்த சிந்தனைக்கும் செல்லாமல் பாத்துக்கொண்டுள்ளார். அறிமுக இயக்குனர் அட்லிக்கு
8/10 மதிப்பெண்கள் கொடுக்கலாம்.

இசை:
ஜி.வி.பிரகாஷ் குமார் தனக்கே உரித்தான பாணியில் படத்தின் இசையை அமைத்துள்ளார். சில இடங்களில் பின்னணி இசை வசனங்களை விட அதிகம் ஈர்க்கிறது. “இமையே இமையே” மற்றும் “ஹே பேபி” பாடல்கள் மிகவும் ஈர்ப்புடையதாக அமைந்துள்ளது. ஆனால் இதுவும் அவரது மற்ற படங்களிலிருந்து மாறுபடாமலே உள்ளது.
மதிப்பெண் 8/10

வசனங்கள்:
வசனங்களில் “பிரதர், வசனம்” வரவேற்கத்தக்கது, சில இடங்களில் வந்த வசனமே மீண்டும் வருவது சலிப்பு. “நம்ம லைஃப்ல நமக்கு ரொம்ப பிடிச்சவங்க...........” என்ற வசனம் படத்தின் கதையினை சுருக்கமாக உணர்த்துகிறது.
மதிப்பெண் : 7/10

நடிப்பு:
“ஆர்யா, ஜெய், நயன், நஸ்ரிய, சத்யராஜ், சந்தானம்” ஆகியவர்கள் கதாபாத்திரத்திற்கான சரியான தேர்வு. ஆர்யா நடிப்பதற்கு பலா இடங்கள் இருந்தும் ஒரே மாதிரியான ரீயாக்ஷனையே காண்பிக்கிறார். நயனின் நடிப்பு பாராட்டத்தக்கது, சில ஆண்டுகளுக்குப் பின் நடிக்க வந்தாலும் நான் ஃபார்ம்-இல் இருக்கிறேன் என்று தன் நடிப்பின் மூலம் காட்டியுள்ளார். ஜெயின் நடிப்பில் “எங்கேயும் எப்போதும்” பட சாயல் இருந்தாலும் இந்த கதாபாத்திரத்திற்கு அவரைத் தவிர எவரும் சரியாக பொருந்தியிருக்க முடியாது என் நிரூபித்துள்ளார்.
     படத்தில் நஸ்ரியாவின் இன்ட்ரோ தான் அதிக கைத்தட்டலகளை வாங்கியுள்ளது. துறு துறு நடிப்பில் தனக்கென ஒரு இடத்தினை பிடித்துள்ளார். பட்த்தில் அவர் வரும் காட்சிகள் குறைவாக இருந்தாலும் தான் வரும் இடங்களில் ரசிக்கவும், ஃபீல் செய்யவும் வைத்துவிடிகிறார். சத்யராஜ், இதுபோல தனக்கென ஒரு அப்பா வேண்டும் என பெண்கள் நினைக்கும் அளவிற்கு மிக கட்சிதமாகப் பொருந்தியுள்ளார். சந்தானம் வழக்கம்போல் ஆல் ரவுண்ட் பெர்ஃபாமன்ஸ் கொடுத்துள்ளார்.

கதைச்சுருக்கம்:
வேண்டா வெறுப்பாக ஆர்யா, நயன் திருமணம் நடக்கிறது. ஒரு சமயத்தில் நயன் மனதில் ஜெய் இருப்பதும், ஆர்யா மனதில் நஸ்ரியா இருப்பதும் இருவருக்கும் தெரியவருகிறது. அதன்பின்பு இருவரும் தற்போதய உலக வாழ்க்கையினை புரிந்துகொண்டு சேர்கிறார்களா என்பதுதான் கதை.
     ஆர்யா தனது பெற்றோருக்காகத் தான் திருமணமே செய்ய ஒப்புக்கொள்கிறார், ஆனால் அவர்களை ஒரு போட்டோவில் கூட காட்ட இயக்குனர் மறந்துவிட்டார் போல.

தற்போதுள்ள இளைஞர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு “ராஜா ராணி” ஏற்ற கதையாக உள்ளது.மொத்தத்தில் இது அனைவரும் பார்க்க வேண்டிய அருமையான திரைப்படம்.

மதிப்பெண் : 7/10


-          - ராஜா கார்த்திகேயேன்

No comments:

Post a Comment