Saturday, December 21, 2013

ENDRENDRUM PUNNAGAI REVIEW IN TAMIL


FOR MORE VISIT,
YOUTUBE
http://goo.gl/YEOci4
WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/
FACEBOOK
http://goo.gl/kkSxQb

மன்னிப்பது, விட்டுக்குடுப்பது வாழ்க்கைக்கு மிக முக்கியமானது. இது தவறும் நேரங்களில் நாம் நமக்கு நெருக்கமானவர்களை இழக்க நேரிடும் என்பதே கதை.

நடிப்பு:
ஜீவா, வினய், சந்தானம் ஆகிய மூவரும் நண்பர்களாக நடிக்கும் லூட்டிகள் படத்திற்கு சிறப்பு. மூவரின் நடிப்பும் சிறப்பாக அமைந்துள்து. சந்தானம் தான் வரும் இடங்களில் எல்லாம் ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார். திரிஷா தன் பங்கிற்கு திறமையாக நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நாஸர், ஆண்ட்ரியா மற்றும் சிலர் வரும் காட்சிகள் கொஞ்சம் தான் என்றாலும் அவரவர் பங்கை சிறப்பாக செய்துள்ளனர்.
இவர்களின் நடிப்பிற்கு – 7 / 10

இயக்கம்:
60 குறும்படங்களையும், வாமனன் படத்தையும் இயக்கிய இயக்குநர் ஐ.அஹமத் இந்தப்படத்தை சிறப்பாக இயக்கியுள்ளார். கதை மற்றும் திரைக்கதை என இரண்டிலும் அருமையாக செய்திருப்பினும் கல்யாணம் ஆனபின்பு எல்லாருமே பெண்களின் தொல்லைக்கு ஆளாகிறார்கள் என்ற லாஜிக் சற்று சறுக்கலாக அமைந்துள்ளது. ஒரு மகிழ்ச்சியாக இருக்கும் தம்பதியாவது காட்டியிருக்கலாம்.
இருந்தாலும், நடைமுறையில் நாம் ஈ.கோ. காரணமாக பல உறாவுகளை இழக்கிறோம் என்பதை தெளிவாக காட்டியுள்ளார்.
இயக்கம் : 7 / 10

இசை:
ஹாரிஸ் ஜெயராஜ் பின்னணி இசையை ஈர்க்கும் அளவிற்கு இல்லாவிட்டாலும் பாடல்கள் யாவும் அருமையாக அமைந்துள்ளாது. படத்தில் வரும் அனைத்து பாடல்களும் சிறப்பாக அமைந்துள்ளது. இருப்பினும் படத்துடன் காணும்போது இருக்கும் சிறப்பு, தனியாக பார்க்கும்போது தோன்ரவில்லை.
இசை : 6.5 / 10

கதைச்சுருக்கும்:
தனது குடும்பத்தில் நடக்கும் இரண்டு சம்பவங்களின் காரணமாக விரக்தியில் உள்ள ஜீவாவிற்கு கிடைக்கும் இரு நண்பர்களான வினய், சந்தானம் இந்த மூன்று பேரும் வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கிறார்கள்.
காதலே பண்ணக்கூடாது, கல்யாணம் பண்ணக்கூடாது என்று ஜீவாவிடம் சத்தியம் பண்ணும் வினையும், சந்தானமும் திடீரென்று கல்யாணம் பண்ணுகிறார்கள், அதனால் அவர்களிடமிருந்து பிரிந்து இருக்கும் ஜீவாவிற்கு கிடைக்கும் திரிஷாவின் நட்பு, காதலாக மாறுகிறது. ஒரு கட்டத்தில் அதை மறைக்கிறார் ஜீவா. கடைசியில் திரிஷாவுடன் சேர்ந்தாரா? வினைய் சந்தானம் நட்பு என்ன ஆனது? என்பதே மீதி கதை. இந்த அருமையான கதையினை அழகான கூறியிருக்கிறார்கள்.

கதை: 7.5 / 10

படத்திலிருந்து....


நாம் செய்வது சரியாக இருந்தாலும், தவறு முழுவதும் அடுத்தவர்கள் மீதே இருந்தாலும் அதை மன்னிப்பதும், விட்டுக்கொடுத்தும் போனால் தான் நம்மை விட்டு பல சொந்தங்கள் போகாமல் இருக்கும் என்பதே கதை.

No comments:

Post a Comment