Wednesday, October 1, 2014

Poojai - Veraarum Songs Lyrics in Tamil

வேறாரும்
வேறாரும் கண்டிராத
பொத்தி வச்ச காதல்
யாரோடும் வந்ததில்ல
இவ்வளவு காதல்
பொல்லாத ஆசை வந்து எட்டிப்பார்க்கும்
சொல்லாத வார்த்தை ஒன்று என்னைத்தாக்கும்
என்னோட நெஞ்சம் உன்னை என்ன கேட்கும்
அது உன்னோட வாழ மட்டும்
ஆசைப்படும் எப்போதும்

வேறாரும் கண்டிராத
பொத்தி வச்ச காதல்
யாரோடும் வந்ததில்ல
இவ்வளவு காதல்

உன்னுடைய ஞாபகத்தில் இத்துப் போனேனே
உன்னைவிட்டா நானும் இங்கு செத்துப் போவேனே
நீ கோபமாக வந்தால் நான் சோகமாவேனே
நீ கொஞ்சும் போது நானும் மிக வேகமாவேனே
என் கொள்கை எல்லாம் போச்சே
மனம் கொத்தடிமை ஆச்சே
ஒரு கைதி போல கையைகட்டி
உந்தன் பின்னே நானும் வந்தேனே


வேறாரும் கண்டிராத
பொத்தி வச்ச காதல்
யாரோடும் வந்ததில்ல
இவ்வளவு காதல்

இத்தனை நாள் யாரும் என்னை தொட்டதில்லையே
இப்படி என் ஞாபகத்தில் பட்டதில்லையே
நான் பாதியாக நின்றேன்
நீ மீதியானாயே
நான் பாவியாக வாழ்ந்தேன்
என் ஆவி ஆனாயே
என் வீரமெல்லாம் போச்சே
ஒரு வெட்கம் உருவாச்சே
உன் கட்டளைக்கு எப்போதும்
கட்டுப்பட்டு காதல் செய்வேனே

வேறாரும் வேறாரும் வேறாரும்
வேறாரும் கண்டிராத
பொத்தி வச்ச காதல்
யாரோடும் வந்ததில்ல
இவ்வளவு காதல்
பொல்லாத ஆசை வந்து எட்டிப்பார்க்கும்
சொல்லாத வார்த்தை ஒன்று என்னைத்தாக்கும்
என்னோட நெஞ்சம் உன்னை என்ன கேட்கும்
அது உன்னோட வாழ மட்டும்
ஆசைப்படும் எப்போதும்

வேறாரும்
வேறாரும் வேறாரும் வேறாரும்

வேறாரும்……….

No comments:

Post a Comment