Wednesday, October 1, 2014

Poojai - Devathai Songs Lyrics in Tamil

அடி அழகே அழகே
மெதுவாய் தொலைந்தேன் நானே
என் இதயம் உருக
தீயை வைத்தாய் நீயே
தேவதையை தேட தேவையில்லையே
நீ என்னுடைய தேவதை பொய்யே இல்லையே
கண்ணெதிரே என்னை காணவில்லையே
இன்று என்னைத்தேட எனக்கு தோணவில்லையே

பூப்போல நீயும் பேச
பெண்ணே நானும் தூங்கலையே
தீப்போல பார்வை வீச
திணறிப்போனேன் தாங்கலையே
நோயாகப் பெண்ணே என்னுள்ளே வந்தாயே
தாயாகிப் பின்னே என்னைத் தாங்கிக் கொண்டாயே

யாரிடமும் நெஞ்சம் சாயவில்லையே
பேரழகி உன்னைக் கண்டேன் மீளவில்லையே
யாரிடமும் நானும் தோற்கவில்லையே
பார்வையாலே தாக்கிச் சென்றாய் தாங்கவில்லையே
நீ பேசும் பொம்மையா
என் வாழ்வின் நன்மையா
காதல் தெய்வமா அன்பில் செய்த வரமா
அடி அழகே அழகே மெதுவாய் தொலைந்தேன்
காலை நேரம் இன்னும் மாறவில்லையே
கண்களோரம் உன் கனவு தீரவில்லையே
வேலையேதும் செய்ய தோணவில்லையே
உன்னுடைய எண்ணம் நெஞ்சில் நீங்கவில்லையே
முதல் காதல் என்பதே
ஒரு வலி அல்லவா
அது தந்த வலியும் கொஞ்சம் சுகம் அல்லவா
என் இதயம் உருக
தீயை வைத்தாய் நீயே


பூப்போல நீயும் பேச
பெண்ணே நானும் தூங்கலையே
தீப்போல பார்வை வீச
திணறிப்போனேன் தாங்கலையே
நோயாகப் பெண்ணே என்னுள்ளே வந்தாயே
தாயாகிப் பின்னே என்னைத் தாங்கிக் கொண்டாயே

தேவதையை தேட தேவையில்லையே
நீ என்னுடைய தேவதை பொய்யே இல்லையே


No comments:

Post a Comment