Sunday, November 16, 2014

Lingaa - Oh Nanba Song Lyrics in Tamil

ஓ நண்பா நண்பா நண்பா வா
கலக்கலாமா

ஏ நண்பா நண்பா நண்பா
வான் திறக்கலாமா

ஆசை இருந்தால் நண்பா
சொர்க்கம் திறக்கும் நண்பா
நாம் அத்தனைக்கும் ஆசைப்பட்டு
முத்தெடுப்போம் நண்பா
வானம் வலது கையில்
பூமி இடது கையில்
வாழ்வே நம் அன்பு பையில்

ஓ நண்பா நண்பா நண்பா வா
கலக்கலாமா

ஏ நண்பா நண்பா நண்பா
வான் திறக்கலாமா

ஓ நண்பா
ஏ நண்பா

ஓ நண்பா
ஏ நண்பா

ஏ நண்பா
ஓ நண்பா

ஏ நண்பா
ஓ நண்பா

காதல் பெண்ணும் ரசிக்கத்தானே
கிண்ணம் ருசிக்கத்தானே
ரெண்டும் அளவு தாண்டி செல்லாதே
உன் எல்லை அறிந்து கொண்டால்
தொல்லை உனக்கில்லை
மீனே தண்ணீரைத் தாண்டி துள்ளாதே
உன்னோடு செல்வம் எல்லாம் சேர்த்துக்கோ
கொண்டாட நண்பன் வேணும் பாத்துக்கோ
முன்னோர்கள் சொன்னால் சொன்னால் ஏத்துக்கோ
வேலைக்கு ஆகாது என்றால் மாத்திக்கோ
ஓ........
ஓ நண்பா நண்பா நண்பா வா
கலக்கலாமா
ஏ நண்பா நண்பா நண்பா
வான் திறக்கலாமா

ஓ சம்போ சந்தோஷமா
ஓ சம்போ பாடலமா
ஓ சம்போ விளையாடலாமா
ஓ சம்போ ஆடலாமா
ஓ சம்போ துள்ளலாமா


மண்ணில் இன்பம் இயற்கைதானே
துன்பம் செயற்கைதானே
முள்ளில் நீ மெத்தை தைத்து தூங்காதே
முன்பு இன்பம் கொடுத்ததெல்லாம்
பின்னால் துன்பம் தரும்
கண்ணா நீ கட்டுப்பாடு தாண்டாதே
இதயம் தெளிவாக வாழ்ந்துபார்
இன்பம் பெரிதாகி தீருமே
உன்னை எல்லார்க்கும் தந்துபார்
உலகம் உனதாகிப் போகுமே

ஓ நண்பா நண்பா நண்பா வா
கலக்கலாமா

ஏ நண்பா நண்பா நண்பா
வான் திறக்கலாமா

ஆசை இருந்தால் நண்பா
சொர்க்கம் திறக்கும் நண்பா
நாம் அத்தனைக்கும் ஆசைப்பட்டு
முத்தெடுப்போம் நண்பா
வானம் வலது கையில்
பூமி இடது கையில்
வாழ்வே நம் அன்பு பையில்
ஓ நண்பா நண்பா நண்பா வா
கலக்கலாமா


No comments:

Post a Comment