Sunday, November 16, 2014

Lingaa - En Mannavva Song Lyrics in Tamil

என் மன்னவா மன்னவா
என்னை விட அழகி உண்டு
ஆனால் உன்னை விட
உன்னை விட தலைவன் இல்லை
ஆமா......
தலைவன் இல்லை
சின்ன சின்ன நட்சத்திரம் பறிக்க வந்தாய்
இந்த வெண்ணிலவு வெள்ளை பூசி

சின்ன சின்ன நட்சத்திரம் பறிக்க வந்தாய்
இந்த வெண்ணிலவு வெள்ளை பூசி
விழுந்துவிட்டாய்

அறிவீரா உயிரை உயிரால் தொடுவீரா
உன் கண்களும்
உன் கண்களும்
பூதேடுதே
உன் கைகளும்
உன் கைகளும்
எனை தேடுதே

சின்ன சின்ன நட்சத்திரம் பறிக்க வந்தேன்
இந்த வெண்ணிலவு வெள்ளை பூசி
விழுந்துவிட்டேன்
அறிவீரா உயிரை உயிரால் தொடுவீரா
அறிவீரா உயிரை உயிரால் தொடுவீரா

நூறு யானைகளின் பந்தம் கொண்டவரின்
கவசம் மார்பில் அணிந்தாய்
கலசம் கொண்ட அந்த கவசம் உடைத்த உன்
மார்பில் நான் புகுந்தேனே

தென்னாட்டு பூவே........
தேநாளின் தீவே...
பால் அன்னம் நீதான்
பசிக்காரன் நான்தான்
மோகக் குடமே
முத்து வடமே
உந்தன் கச்சை மாங்கனி.....
வந்து வெயிலா நீ....

சின்ன சின்ன நட்சத்திரம் பறிக்க வந்தாய்
இந்த வெண்ணிலவு வெள்ளை பூசி
விழுந்துவிட்டாய்
அறிவீரா உயிரை உயிரால் தொடுவீரா


வெயில் பாராத வெள்ளைப் பூக்களை
கையில் தருவாய் பெண்ணே
ஏழு தேசங்களை வென்ற மன்னன்
உன் கால் சுண்டு விரல் கேட்டேனே

சிற்றின்பம் தாண்டி பேரின்பம் கொள்வாய்
உயிர் தீண்டியே நாம் உடல்தாண்டி போவோம்
யாதா அழகே ஓட வடிவே
என்னைக் குடில் கொள்ளவா கொற்றவை மைந்தா

சின்ன சின்ன நட்சத்திரம் பறிக்க வந்தேன்
இந்த வெண்ணிலவு வெள்ளை பூசி
விழுந்துவிட்டேன்

சின்ன சின்ன நட்சத்திரம் பறிக்க வந்தாய்
இந்த வெண்ணிலவு வெள்ளை பூசி
விழுந்துவிட்டாய்
அறிவீரா உயிரை உயிரால் தொடுவீரா
அறிவீரா உயிரை உயிரால் தொடுவீரா



No comments:

Post a Comment