Thursday, December 18, 2014

Vai Raja Vai - Vandha Kadha Song Lyrics in Tamil

வந்த கதை வாழ்ந்த கதை
சொந்த கதை சோகக் கதை
வந்த கதை வாழ்ந்த கதை
சொந்த கதை சோகக் கதை

எங்க போய் முடியும் எனக்கு மட்டும் தெரியும்
எது எங்க போய் முடியும்
அது எனக்கும் மட்டும் தெரியும்
வை ராஜா வை
இந்த வாழ்க்கை ஒரு பொய்
நீ பொழைக்க இரண்டு கை
நான் சொல்லுறத செய்
ஏய்
வை ராஜா வை
இந்த வாழ்க்கை ஒரு பொய்
நீ பொழைக்க இரண்டு கை
நான் சொல்லுறத செய்

ஸ்டெரஸ் பண்ணி சொல்லுவன்டா
மிஸ்சு போடும் டிரெஸ்ச
ஸ்கெட்ச் போட்டு கத்துத்தருவேன்
நாளைக்கு வரும் டெஸ்ட்ட

டெஸ்ட்ட ... டெஸ்ட்ட...
டெஸ்ட்ட.... டெஸ்ட்ட... டெஸ்ட்ட

டச்சு பண்ண நினைச்சாக்கா
வைச்சுடுவேன் கெக்க
தொட்டுக்கூட பாக்காம
கரைச்சு குடிப்பேன் புக்க
வெட்டிப்பயன் எனக்கு ரொம்ப
புடிச்ச கேமு கிரிக்கெட்டு
வெத்துவேட்டு எவன் வந்தாலும்
துட்ட குடுத்து சரிக்கட்டு
சத்தியத்த பேசுடான்னா
வைக்கிறேன் உனக்கு கட் அவுட்டு
சொத்து சுகம் காலியானா
மண்ணை விட்டு கெட் அவுட்டு

வை ராஜா வை
இந்த வாழ்க்கை ஒரு பொய்
நீ பொழைக்க இரண்டு கை
நான் சொல்லுறத செய்
ஏய்
வை ராஜா வை
இந்த வாழ்க்கை ஒரு பொய்
நீ பொழைக்க இரண்டு கை
நான் சொல்லுறத செய்

எத்தனை முறை புரண்டாலும்
ஒட்டுற மண்ணுதான் ஒட்டும்
எல்லாருக்கும் ஒண்ணுதான்
நான் எழுதி வச்ச சட்டம்




சட்டம்...சட்டம் ...
சட்டம்... சட்டம்... சட்டம்....

சட்டில சோறு இருந்தாத்தான்
கரண்டியில மாட்டும்
நீ புட்டில பால வைச்சா
எந்த பூனை வந்து குடிக்கும்
உள்ளை வெளியே ஆட்டத்துல
ஒன்னா நம்பரு நானு
குள்ள நரியா வேசம் போட்டு
காட்ட மாட்டன் சீனு
ஏய் வம்புச்சண்டை விலை கொடுத்து
வாங்க மாட்டேன் நானு
ஏய் வர்ற சண்டைய போடாமலே
உடமாட்டேன் நானு

வை ராஜா வை
இந்த வாழ்க்கை ஒரு பொய்
நீ பொழைக்க இரண்டு கை
நான் சொல்லுறத செய்
ஏய்
வை ராஜா வை
இந்த வாழ்க்கை ஒரு பொய்
நீ பொழைக்க இரண்டு கை
நான் சொல்லுறத செய்



Vai Raja Vai - Pookkamazh Song Lyrics in Tamil

பூக்கமழ் ஓவியம் புது போக்கிய சேர்க்கையும்
வினை செரிச் செருக்கும் சிந்தையில் ஆக்கியாவிலென
அம்பொன் வழக்கு வாக்கியம்
பசுமரமாகள் மேய நான்

பெண்ணே மானென்றெண்ணாதே
என்னை நிலவென்றெண்ணாதே
நீ கண்ணை மூடித்திறக்கும் முன்
உன் இதயம் கொய்தால் கேட்காதே

பெண்ணே மானென்றெண்ணாதே
என்னை நிலவென்றெண்ணாதே
நீ கண்ணை மூடித்திறக்கும் முன்
உன் இதயம் கொய்தால் கேட்காதே


ஒரு நிலைக்கோர்
இங்கே இன்று நான் தொடுத்தேன்
வா உன்னை வெல்ல
ஒரு கிண்ணத்தில் தேன் குடித்தேன்

ஒரு நிலைக்கோர்
இங்கே இன்று நான் தொடுத்தேன்
வா உன்னை வெல்ல
ஒரு கிண்ணத்தில் தேன் குடித்தேன்

நீ தினம் விசும்பினால்
விஞ்ஞை நாட்டவர்
உவ்வுடன் உடம்பினால் உருவம் ஒப்பிலார்
மானுடை நோக்கினால் வாயில் வாங்கினால்
தேனுடை மலரிடை தேந்தேடி ஏங்குதே

பெண்ணை கனியென்றெண்ணாதே
என்னைக் கிணியென்றெண்ணாதே
இக்காமக் காட்டில் வேட்டையாடும்
புலியின் கண்ணைப் பார்க்காதே

பெண்ணை கனியென்றெண்ணாதே
என்னைக் கிணியென்றெண்ணாதே
இக்காமக் காட்டில் வேட்டையாடும்
புலியின் கண்ணைப் பார்க்காதே

ஒரு நிலைக்கோர்
இங்கே இன்று நான் தொடுத்தேன்
வா உன்னை வெல்ல
ஒரு கிண்ணத்தில் தேன் குடித்தேன்

ஒரு நிலைக்கோர்
இங்கே இன்று நான் தொடுத்தேன்
வா உன்னை வெல்ல
ஒரு கிண்ணத்தில் தேன் குடித்தேன்


Vai Raja Vai - Pachchai Vanna Song Lyrics in Tamil

ஏய் பச்சை வண்ணப் பூவே சிரித்துப் போனாய்
என் பூமியெங்கும் பச்சை இறைத்துப் போனாய்
செடி கொடிகள் எல்லாம் உன் முகம் பார்த்தேன்
நான் இழை தழையோடு என் விரல் கோர்த்தேன்
ஏ புல்லின் மேலே பாதம்
வைக்காமல் செல்கின்றேன் பெண்ணே
உன் சொல்லைக் கேட்ட பின்னே
ஏய் பச்சை வண்ணப் பூவே சிரித்துப் போனாய்
என் பூமியெங்கும் பச்சை இறைத்துப் போனாய்

என் காலொன்றில் முள் குத்தினால்
அவள் முள்ளுக்கு நோய் பார்க்கிறாள்
வாய் கொண்டு பேசாதே
காய் தாங்கும் மரமொன்றை
தாயென்று சொன்னாலே எனை ஈர்க்கிறாய்
நான் கிளையென்றில் உந்தன் கை பார்க்கிறேன்
அதன் ஓரத்தில் லேசாய் கீறல்கள் கண்டாலே
என் நெஞ்சில் வலி கொள்கிறேன்

இதயச்சுவர் மேலே உன் நிறம் பார்த்தேன்
ஏய் நானும் மரமாக ஏன் வரம் கேட்டேன்
இதயச்சுவர் மேலே உன் நிறம் பார்த்தேன்
ஏய் நானும் மரமாக ஏன் வரம் கேட்டேன்
ஏன் வரம் கேட்டேன்


ஏய் என் வீடெங்கும் காடாக்கினாய்
என் காட்டுக்குள் கிளியாகினாய்
கிளியொன்றின் கீச்சாகி
இலையொன்றின் மூச்சாகி
முகிலொன்றின் பேச்சாகி எனை வீழ்கிறாய்
ஆண்கூட்டங்கள் இங்கே ஏராளமாய்
நான் நீரற்று நின்றேன் நீ வந்து வீழ்ந்தாய்
என் வேறெங்கும் தாராளமாய்

மழை நனைத்த பின்னே நான் சிலிர்க்கின்றேன்
என் நெஞ்சுக்குள்ளே ஏதோ நான் துளிர்க்கின்றேன்
மழை நனைத்த பின்னே நான் சிலிர்க்கின்றேன்
என் நெஞ்சுக்குள்ளே ஏதோ நான் துளிர்க்கின்றேன்
நான் துளிர்க்கின்றேன்

பச்சை வண்ணப் பூவே சிரித்துப் போனாய்
என் பூமியெங்கும் பச்சை இறைத்துப் போனாய்
செடி கொடிகள் எல்லாம் உன் முகம் பார்த்தேன்
நான் இழை தழையோடு என் விரல் கோர்த்தேன்
ஏ புல்லின் மேலே பாதம்
வைக்காமல் செல்கின்றேன் பெண்ணே
உன் சொல்லைக் கேட்ட பின்னே
ஏய் பச்சை வண்ணப் பூவே
ஏய் பச்சை வண்ணப் பூவே