Showing posts with label VELLAKKARA DURAI SONGS LYRICS IN TAMIL. Show all posts
Showing posts with label VELLAKKARA DURAI SONGS LYRICS IN TAMIL. Show all posts

Thursday, December 18, 2014

Vellakkara Durai - Nadigar Thilagam Song Lyrics in Tamil

நடிகர் திலகம் இல்லன்னு கவலைப்படாத
நல்லா நடிக்கப் பொண்ணு
புறந்திருக்கா மறந்துவிடாத

நீ நடிகர் திலகம் இல்லன்னு கவலைப்படாத
நல்லா நடிக்கப் பொண்ணு
புறந்திருக்கா மறந்துவிடாத
போர போக்கில் அவளும் நடிச்சா
எனக்குத் தெரியல
அவ போட்ட வேசம் சரியா தவறா
அதுவும் புரியல
அவள எண்ணி மனசுக்குள்ள
ஆனேன் கோளாறு
அவ நடிப்ப பாத்து கொடுக்கப்போறோம்
மூனு ஆஸ்காரு
இன்னும் மூனு ஆஸ்காரு

நடிகர் திலகம் இல்லன்னு கவலைப்படாத
நல்லா நடிக்கப் பொண்ணு
புறந்திருக்கா மறந்துவிடாத

ஏய் பாச மலர் பாத்து என்னை
பாலும் பழம் பாத்து என்னை
பாவி புள்ள நடைய பாத்தே பசிமறந்தேனே
பந்த பாசம் பாத்து என்னை
பராசக்தி பாத்து என்னை
கன்னிப்புள்ள குரலக்கேட்டே கதையழந்தேனே
அவ கண்ணாலதானே நானும்
படிக்காத மேதை ஆனேன்
அவ பின்னால அன்பைத் தேடி
திரிசூலம் ஆகிப் போனேன்
அவளோட திருவிளையாடலில் தேவர் மகனானேன்
தேவர் மகனானேன் இப்ப தெய்வ மகனானேன்


நடிகர் திலகம் இல்லன்னு கவலைப்படாத
நல்லா நடிக்கப் பொண்ணு
புறந்திருக்கா மறந்துவிடாத

ஓ.....மாடி வீட்டு ஏழை போல
மனோகரா சோகம் போல
அன்பு வச்ச மனசில் இப்ப
தொலைஞ்சது சாந்தி
கட்டபொம்மன் வீரம் போல
கை கொடுத்த தெய்வம் போல
விட்டுப்புட்டு அவளும் செல்ல
விளங்கல நீதி
அவ இல்லாதுபோனா வாழ்வில்
விடிவெள்ளிக் கூட தீபம்
அவ பொல்லாத பேச்சைக்கேட்டு
இரவாச்சே நீலவானம்
அவளாலே வணங்காமுடி நான் கூண்டுக்கிளியானேன்
கூண்டுக் கிளியானேன் இப்ப ஞான ஒளியானேன்

நடிகர் திலகம் இல்லன்னு கவலைப்படாத
போர போக்கில் அவளும் நடிச்சா
எனக்குத் தெரியல
அவ போட்ட வேசம் சரியா தவறா
அதுவும் புரியல
அவள எண்ணி மனசுக்குள்ள
ஆனேன் கோளாறு
அவ நடிப்ப பாத்து கொடுக்கப்போறோம்
மூனு ஆஸ்காரு
இன்னும் மூனு ஆஸ்காரு


Vellakkara Durai - Koodha Kaathu Song Lyrics in Tamil

கூதக் காத்து....
கூதக் காத்து... கூதக் காத்து....
கூதக் காத்து கொல்லுதடி குறுச்சருத்தாடி
இல்ல கூந்தல் மட்டும் தாடி

கூதக் காத்து கொல்லுதய்யா
மல்லு வேட்டி தாயா இல்ல மல்லுக்கட்டுவாயா

தாலிக் கயிறு இருக்கட்டுமே
நீ மத்ததெல்லாம் மத்ததெல்லாம் கழட்டிவை

விழிகள் முழிச்சு கிடக்கட்டுமே
உசுரே ....
விளக்கத் தூங்க சொல்லு

கூதக் காத்து

கூதக் காத்து

நீ வெக்கப்பட்டு ஓரத்தில் தவிக்க
உன் வெக்கத்தை என் நாவினில் துடைக்க
நீ கட்டுப்பட்டு தொட்டுக்கிட்டு கட்டிக்கொள்ளக்கூடாதா

என் பூவுக்குள்ள தேந்துளி கொதிக்க
என் நெஞ்சுக்குள்ள தாகங்கள் இனிக்க
என் அச்சம் மட்டும் போகும் வரை விட்டுவைக்கக்கூடாதா


அடியே நானும் மனுசந்தானே
ஆடவாடி செந்தேனே

மழையைத் தாங்கும் இலையைப்போல
மடங்கி நானும் நின்னேனே

ஒரு போர்வையோடு வேகம் ரெண்டு
வேர்வை சிந்துந்தானே

கூதக் காத்து கூதக் காத்து

நான் குத்தவைச்ச மானத்த மறைக்க
உன் கொள்ளிக்கண்ணு சேலைய உரிக்க
என் அச்சம் நாணம் அத்தனையும்
மொத்தமாக தோத்தாச்சு

உன் எக்கச்சக்கம் வாவென்று அழைக்க
என் பத்துவிரல் பூட்டுகள் திறக்க
நீ பொத்திவைச்ச அத்தனையும்
சுத்தமாக பாத்தாச்சு

துன்பம் எனக்கு சுகமா இருக்கு
சூரக்காட்டு ராசாவே

கிறுக்கா கிடக்கு ஏனோ எனக்கு
குறுக்குச் சிறுத்த ரோசாவே

இன்று ஆசைப் போரில் யார்தான் ஜெயிப்பர்
என்று தேரும் தானே

கூதக் காத்து  கூதக் காத்து
கூதக் காத்து கொல்லுதய்யா
மல்லு வேட்டி தாயா இல்ல மல்லுக்கட்டுவாயா
தாலிக் கயிறு இருக்கட்டுமே
நீ மத்ததெல்லாம் மத்ததெல்லாம் கழட்டிவை
விழிகள் முழிச்சு கிடக்கட்டுமே
உசுரே .....
விளக்கத் தூங்க சொல்லு





Vellakkara Durai - Kaakkaa Muttai Song Lyrics in Tamil

காக்கா முட்டை காக்கா முட்டை
காக்கா முட்டை  காக்கா முட்டை
காக்கா முட்டை  கண்ணாலதான் கபடி ஆடுவேன்
கன்னி காலம் நேரம் பாத்திடாம மகுடி ஊதுவேன்
வேட்டி கட்டும் உங்களுக்கு கிறுக்க ஏத்துவேன்
ஒன்னு வேண்டும் வரை வேணியால சரக்க ஊத்துவேன்
இருப்பவங்க ஜாக்கெட்டுல பணத்த குத்துங்க
ஏதும் இல்லாதவங்க போகும் வரை கையக்கட்டுங்க
ரசிப்பவங்க சொக்கி நில்லுங்க
என்னை ரகசியமா புக்கு பண்ணுங்க
காக்கா முட்டை காக்கா முட்டை
காக்கா முட்டை  காக்கா முட்டை ஹொய்...

தில்லு இருந்தா என்னை தீண்டவரலாம்
தேவை இருந்தா என்னை திரும்ப திரும்ப நெருங்கலாம்
காசு இருந்தா என்னை வாங்கிவிடலாம்
காதல் இருந்தால் என்னை கடைசிவரையில் தொடரலாம்
தயங்கி நிக்குற ஆளு நோயில் படுக்குறான்
தடவிக் கொள்ளுற ஆளே வாழ்வை ஜெயிக்குறான்
எதுவும் இங்கே குத்தம் இல்லிங்க
அள்ளி அணைக்க வேணா ரத்தம் சுண்டுங்க
காக்கா முட்டை காக்கா முட்டை
காக்கா முட்டை  காக்கா முட்டை


கட்டிக்கத் தெரியாம ஒட்டிக்க முடியாம
கிட்டத்தில் அட நீயும் வாராதே வீணே

கிட்டுக்கத் துணியாம எட்டத்தில் இருந்தே
நீ பத்திக்க நினைச்சாலே ஆகாது தானே

ஆசை துள்ளுற நெஞ்சை நீ விட்டுவிடாத
அம்மனு என்னையும் சுட்டுவிடாத
கண்டத எப்பவும் தட்டிவிடாத
வந்திட என்னிடம் வைக்கப்படாத

பாசம் சில நாள் கொண்ட நேசம் சில நாள்
ஆசை சில நாள் இந்த அறிய உடலை அறியவா
நீயும் சில நாள் இங்கே நானும் சில நாள்
யாரும் சில நாள் எந்த நிலையில் சரசம் புரியவா
துன்பங்கள் அங்க ஏத்து குத்து விளக்கத்தான்
புரிஞ்சு கொள்ளனும் நானும் சின்ன சிலுக்குத்தான்
இருக்கும் மட்டும் என்னை ஒட்டுங்க இன்னும்
இருக்கிக்கொள்ள நானும் கப்பங்கட்டுங்க

காக்கா முட்டை காக்கா முட்டை
காக்கா முட்டை  காக்கா முட்டை
காக்கா முட்டை  கண்ணாலதான் கபடி ஆடுவேன்
கன்னி காலம் நேரம் பாத்திடாம மகுடி ஊதுவேன்
வேட்டி கட்டும் உங்களுக்கு கிறுக்க ஏத்துவேன்
ஒன்னு வேண்டும் வரை வேணியால சரக்க ஊத்துவேன்
இருப்பவங்க ஜாக்கெட்டுல பணத்த குத்துங்க
ஏதும் இல்லாதவங்க போகும் வரை கையக்கட்டுங்க
ரசிப்பவங்க சொக்கி நில்லுங்க
என்னை ரகசியமா புக்கு பண்ணுங்க

காக்கா......

Vellakkara Durai - Ammadi Un Azhagu Song Lyrics in Tamil

அம்மாடி உன் அழகு செம தூளு
உன்னைக் கண்டா பொழுதும் திருநாளு
உன்னைப் பார்த்துதான் தடுமாறுறேன்
புயல்காத்துல பொரியாகுறேன்
அடிமாடு நான் மிரண்டோடுறேன்
ஒரு வார்த்தை சொல்லில் உயிர்தாரேன்

அம்மாடி உன் அழகு செம தூளு
உன்னைக் கண்டா பொழுதும் திருநாளு

முன்னழகில் நீயும் சீதை
பின்னழகில் ஏறும் போதை
பொட்டபுள்ள உன்னை நான் பாத்து
சொட்டு சொட்டா கரைஞ்சேனே
ரெக்கைக் கட்டி பறந்த ஆளு
பொட்டிக்குள்ள அடைஞ்சேனே
ஆத்தாடி நீதான் அழுக்கடையாத பால் நுரை
சேத்தோட வாழ்ந்தும் கரைபடியாத தாமரை
பூக்குற என்னைத் தாக்குற
அம்மாடி உன் அழகு செம தூளு
உன்னைக் கண்டா பொழுதும் திருநாளு


கண்ணிரண்டு போதவில்ல
கட்டழக பாத்து சொல்ல
ஒட்டுமொத்த ஒயிலக்காளை
பத்து சென்மோ எடுப்பேனே
கட்டுசட்டா கனிஞ்ச உன்னை
கட்டிவச்சு ரசிப்பேனே                      
தேசாதி தேசம் வரத் திரிஞ்சேனே ஆம்பள
ஆனாலும் கூட ரதி உனைப்போல பாக்கல
ஹீட்டுல எழும் பாட்டுல

அம்மாடி உன் அழகு செம தூளு
உன்னைக் கண்டா பொழுதும் திருநாளு
உன்னைப் பார்த்துதான் தடுமாறுறேன்
புயல்காத்துல பொரியாகுறேன்
அடிமாடு நான் மிரண்டோடுறேன்
ஒரு வார்த்தை சொல்லில் உயிர்தாரேன்
அம்மாடி உன் அழகு செம தூளு
உன்னைக் கண்டா பொழுதும் திருநாளு