Showing posts with label JEEVA SONGS LYRICS IN TAMIL. Show all posts
Showing posts with label JEEVA SONGS LYRICS IN TAMIL. Show all posts

Sunday, September 28, 2014

Jeeva - Sangimangi Song Lyrics in Tamil

--இசை--

நீ நரகஜன தானா ரகஜன
தரக தரக தரதாரா
நீ நரகஜன தானா ரகஜன ரா

நீ நரகஜன தானா ரகஜன
தரக தரக தரதாரா
நீ நரகஜன தானா ரகஜன ரா

சங்கி மங்கி ஆடும்
மனம் சங்கி மங்கி ஆடும்
நீ நரகஜன தானா ரகஜன ரா

இங்கும் அங்கும் தாவும்
அது இங்கும் அங்கும் தாவும்
நீ நரகஜன தானா ரகஜன ரா

அடடா காதல்
என் காதல்
உதடு தாண்டும் முன்னே
அதிலே வாழ்ந்து மெய் தோய்ந்து
பிறவி மாயும் கண்ணே
சொல்லாத காதல் சொல்ல
ரெண்டாம் பிறவி கண்டேனே
வாட்ஸ் அப்!!!!!!

சங்கி மங்கி ஆடும்
மனம் சங்கி மங்கி ஆடும் ஓ
நீ நரகஜன தானா ரகஜன ரா

ஹே இங்கும் அங்கும் தாவும்
அது இங்கும் அங்கும் தாவும்
நீ நரகஜன தானா ரகஜன தரங்க தரங்க தர தாரா
தாரா
தாரா

சொல்லு சொல்லு....

--இசை—

காதல் நான் தெரிவிக்கும் முன்னே
சாலை அங்கு முடிகிறதே
நேரம் அது அமைகிற பொழுது
வீரம் என்னை விலகியதே

சுமை இறக்காமல் பாவி நெஞ்சு வாடிடும்
மழை திறக்காமல் மேகம் ஒன்று ஏங்கிடும்
இதழின் வரையில் வரும் தாபம்
அடி தரையில் விழுந்து அது சாகும்
வென்றாலும் போவென்றாலும் இதயம் உன்னைக் கொண்டாடும்

சங்கி மங்கி ஆடும்
மனம் சங்கி மங்கி ஆடும்
நீ நரகஜன தானா ரகஜன ரா

இங்கும் அங்கும் தாவும்
அது இங்கும் அங்கும் தாவும்

காதல் நான் தெரிவித்த பிறகு
பூமி அது என்னாகும்
மண்ணில் சுடும் கத கத மௌனம்
உன்னில் மெல்ல குடியேறும்


பதில் எதிர்பார்த்து மாலை நேரம் காத்திடும்
உன் விழி அசைந்தால் பாதி பூக்கள் பூத்திடும்

முத்தம் புறப்பட்டு வரலாம்
உன் சித்தம் யாருக்குத் தெரியும்
வென்றாலும் போவென்றாலும் இதயம் உன்னைக் கொண்டாடும்

சங்கி மங்கி ஆடும்
மனம் சங்கி மங்கி ஆடும்
நீ நரகஜன தானா ரகஜன தரங்க தரங்க தர தாரா

இங்கும் அங்கும் தாவும்
அது இங்கும் அங்கும் தா.....வும்
நீ நரகஜன தானா ரகஜன தரங்க தரங்க தர தாரா

நீ நரகஜன தானா ரகஜன ரா



Jeeva - Ovvundraai Thirudugiraai Song Lyrics in Tamil

வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்
விட்டு விட்டு மின்னல் வெட்டும்
சத்தமின்றி இடி இடிக்கும்
இருவர் மட்டும் நனையும் மழை அடிக்கும்

இது கால மழையல்ல காதல் மழை

ஒவ்வொன்றாய் திருடுகிறாய் திருடுகிறாய்
யாருக்கும் தெரியாமல் திருடுகிறாய்
முதலில் என் கண்களை
கண்களை
இரண்டாவது இதயத்தை
இதயத்தை
மூன்றாவது மொத்தத்தை
மொத்தத்தை

ஒவ்வொன்றாய் திருடுகிறாய் திருடுகிறாய்
யாருக்கும் தெரியாமல் திருடுகிறாய்

முதலில் என் கொய்களை
இரண்டாவது கைகளை
மூன்றாவது வெட்கத்தை 
வெட்கத்தை

--இசை--

நோகாமல் என் தோளில் சாய்ந்தால் போதும்
உன் நுனி மூக்கை காதோடு நுனைத்தால் போதும்

கண்ணோடு கண் பார்க்கும் காதல் போதும்
இரு கண் கொண்ட தூரம் போல்
தள்ளி இரு போதும்

பெண்மையில் பேராண்மை
ஆண்மையிலோ பெண்மை
கொண்டறியும் நேரம் இது காதலியே

ஒவ்வொன்றாய் திருடுகிறாய் திருடுகிறாய்
யாருக்கும் தெரியாமல் திருடுகிறாய்

எனக்குள்ளே மலர்கிறதே
இதன் பெயர் தான் காதல்
இதன் பின்னே எழுகிறதே
அதன் பெயர் தான் காமம்

மீசையோடு முளைக்கிறதே
இதன் பெயர்தான் காதல்
ஆசையோடு அலைகிறதே
அதன் பெயர்தான் காமம்.


உள்மனம் தன்னாலே
உருகுது உன்னாலே
காதலுக்கும் காமத்துக்கும்
மத்தியிலே......

ஒவ்வொன்றாய் திருடுகிறாய்
திருடுகிறாய்
யாருக்கும் தெரியாமல்
திருடுகிறாய்
முதலில் என் கண்களை
இரண்டாவது இதயத்தை
மூன்றாவது..........

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......

மொத்தத்தை

மொத்தத்தை


Jeeva - Oruthi Maelae Song Lyrics in Tamil

--இசை--
சூபா சூபா சூபசூபா
சூபா சூபா சூபசூபா
சூபா சூ.....பா.....

ஒருத்தி மேலே மீண்டும் மையலானேன்
தோளில் ஏறி தூது போடி
ஒருத்தி மேலே மீண்டும் காதலானேன்
தோளில் ஏறி தூது போடி

ஏ...............
ஆண்டாண்டுகள் கடந்தும் மாறாமலே
வாசம் வந்து கொண்டாலடி
கண் சொல்வதை தன் வாயில் கூறாமலே
என்னைக் கொன்று சென்றாலடி

ஒருத்தி மேலே மீண்டும் மையலானேன்
தோளில் ஏறி தூது போடி
ஒருத்தி மேலே மீண்டும் காதலானேன்
தோளில் ஏறி தூது போடி

ரா................பபபபபா...........
பபபா   பபபா   பபபபபபா.............
டுடுடு டுடுடு டுடுடு டுடூடுடூ..............
--இசை--

அழகோ அழகோ
உனையும் விடவும் குறைவு
ஆனாளுமை செல்வாயா

திமிரும் திமிரும்
உனையும் விடவும் அதிகம்
வேண்டாமென சொல்வாயா
முத்தங்கள் நூறு நான் தந்தேன்
கள்ளியாய் தூக்கி போனாளே
என்னிடம் மீண்டும் தாவென்று
கேட்டதும் மௌனம் ஆனாயே
நீ சென்று என் முத்தம் அள்ளி கொண்டு வா

ஒருத்தி மேலே மீண்டும் மையலானேன்
தோளில் ஏறி தூது போடி
ஒருத்தி மேலே மீண்டும் காதலானேன்
தோளில் ஏறி தூது போடி

--இசை--



அவளை அவளை ரசித்து கிடந்த விழிகள்
வேறாரையும் பார்க்காதே
அவளை அவளை பழகித் தொலைத்த இதயம்
வேறாரையும் ஏற்காதே
தோழியே நீ போய் கேட்டாலும்
காதலே இல்லை சொல்வாளே
காலிலே விழுந்து கேட்டாலும்
பொய்யிலே நம்மை கொல்வாளே
நீயேனும் என் காதல் ஏற்றுக்கொள்ளடி

இங்க பாரு ஜீவா
நீ எவ்ளோ டிரை பண்ணினாலும்
நீ நினைக்கிறது நடக்காது விட்டுறு....

ஒருத்தி மேலே மீண்டும் காதலேனேன்
தூது போக யாரும் வேண்டாம் வேண்டாம்
வெடிக்கும் எந்தன் நெஞ்சும் ஆசை சொல்ல
கண்கள் போதும் வார்த்தை வேண்டாம் வேண்டாம்

ஆண்டாண்டுகள் கடந்தும் மாறாமலே
காதல் ஒன்று கொண்டேனடி
கண் சொல்வதை உன் வாயில் நீ கூறினால்
நானும் கொஞ்சம் வாழ்வேனடி

--இசை--



Jeeva - Oru Rosa Song Lyrics in Tamil

--இசை--

ஒரு ரோசா உன்ன லூசா
ஆக்கிப் போனாளே அவ லேசா

--இசை--


ஒரு ரோசா உன்ன லூசா
ஆக்கிப் போனாளே அவ லேசா

ஒரு ரோசா உன்ன தூசா
ஊதி போனாலே அழகேசா

லாங்கர் விளக்குக்குள்ளாரே
மாட்டி தவிக்கும் ஈசலுதான்
காதல் வெறுப்பில் இருந்தாலே
மனசு முழுக்க டீசலுதான்
ஒரு உசுரு இங்க ஆடுது ஊசலுதான்

ஒரு ரோசா உன்ன லூசா
ஆக்கிப் போனாளே அவ லேசா

ஒரு ரோசா உன்ன தூசா
ஊதி போனாலே அழகேசா


--இசை--

காலி ஃபிளவரும் வாசன தூக்கும்
காதல் கிருக்கு முன்னாடி
காலி இதயம் அழுகைய தேக்கும்
காதல் கிறுக்கு பின்னாடி
உசர உசர உன்ன கூட்டிப் போயி
பறக்க பழக்கிவிடும் முன்னாடி
அசர அசர உன்ன போட்டு அடிச்சு
சரக்க பழக்குமே பின்னாடி
நீ தரையில் விழுகிற கண்ணாடி

ஒரு ரோசா உன்ன லூசா
ஆக்கி போனாளே அவ லேசா

--இசை--

சாக்கு பீச சாக்கெலெட்டாட்டும்
சப்பி கிடந்தான் அன்னிக்கு
டேப்பு இல்லா கேசட்டப் போட்டு
பாட்டு கேட்டான் இன்னிக்கு
மரத்தில் மரத்தில் அவன் காம்பச கீறி
இதயம் வரைஞ்சு வச்சான் அன்னிக்கு
இடியில் இடியில் அந்தப் பூ மரம்
பூரா கருகி போச்சுடா இன்னிக்கு
அட கடைசியில் வந்தான் தண்ணிக்கு

ஓ..  ஒரு ரோசா உன்ன லூசா
ஆக்கிப் போனாளே அவ லேசா

ஒரு ரோசா உன்ன தூசா
ஊதி போனாலே அழகேசா

ஒரு ரோசா.............


                         

Jeeva - Naetru Naan Song Lyrics in Tamil

--இசை—

நேற்று நான் பார்த்ததும்
உன்னைத்தானா சொல்
இன்று நான் காண்பதும்
உன்னைத்தானா சொல்

ஆடை மாற ஜாடை மாற
கூந்தல் பாதம் யாவும் மாற
கண்களோ உன் கண்களோ மாறவில்லை
கண்களோ என் கண்களோ ஏமாறவில்லை
பொய் கூறவில்லை


நேற்று நான் பார்த்ததும்
உன்னைத்தானா சொல்
இன்று நான் காண்பதும்
உன்னைத்தானா சொல்

பள்ளிக்கூட வாசம் மீண்டும்
தள்ளிப்போன நேசம் மீண்டும்
தூரத்தில்
உன் வாசனை என்னை தாக்குதடி

பார்வையை உன் பார்வையை
எதிர்பாக்குதடி

மனம் கேட்குதடி

Jeeva - Engae Ponaai Song Lyrics in Tamil

--இசை--

எங்கே போனாய் யாரைத் தேடி போனாய்
எங்கே போனாய் என்னை நீங்கிப் போனாய்
கனவைத் தேடியாய் இதயம் தூங்கிப் போனாய்
பெருமைத் தேடியாய் இருளில் மூழ்கிப் போனாய்
மீண்டுவா மீண்டுவா
மீண்டுவா மீண்டுவா

எங்கே போனாய் யாரைத் தேடி போனாய்
எங்கே போனாய் என்னை நீங்கிப் போனாய்

--இசை--



நேற்று காலை ஒன்றாய் சிரித்தோம்
நேற்று மாலை ஒன்றாய் அழுதோம்
விடிந்து முடிந்ததும் நம் உறவு முடிந்ததா
தினமும் சாயும் தோள்கள் தரையில் சாய்வதா
எனையே கண்ட கண்கள் நெருப்பில் தீய்வதா

மீண்டுவா மீண்டுவா
மீண்டுவா மீண்டுவா

எங்கே போனாய் யாரைத் தேடி போனாய்
எங்கே போனாய் என்னை நீங்கிப் போனாய்

இனிமேல் நான் அழ விழியும் இங்கு இல்லை
இனிமேல் நான் எழ உலகில் யாருமில்லை


மீண்டுவா மீண்டுவா
மீண்டுவா மீண்டுவா