Showing posts with label Isal Songs Lyrics in Tamil. Show all posts
Showing posts with label Isal Songs Lyrics in Tamil. Show all posts

Sunday, November 16, 2014

Isai - Nee Poiya Song Lyrics in Tamil

நான் காண்பது இங்கு உண்மையா
ஏ உயிரே என் உயிரே
நீ சாகாதிரு
நான் வாழ்வதே இங்கு உண்மையா
என் மனமே என் மனமே
நீ வீழாதிரு
எனை சுட்ட நிலவு பொய்யா
எனை தொட்ட தென்றல் பொய்யா
நீ இட்ட முத்தம் பொய்யா
பெண்ணே நீ மெய்யா இல்லை பொய்யா
சிறு ஒரு இதயத்தை மறுபடி மறுபடி
உலகமே மிதித்ததுடி
வலியிலும் துயரிலும் குழம்பிய இருதயம்
உனக்கென துடித்ததடி
வீழ்கையில் நான் வீழ்கையில்
உன் காதல் தாங்குமடி
நீயுமே பொய்யாகினால் என் உயிரே நீங்குமடி...
நீ பொய்யா.........
யார் கேட்டது இந்த காதலை
ஏ விழியே நீ அவளை ஏன் காட்டினாய்

யார் கேட்டது இந்த பொய்யினை....
என் மனமே ..... நீ என்னையே ஏன் ஏமாற்றினாய்
அவள் ஊடல் முழுவதும் பொய்யா
அவள் விழியின் மொழிகள் பொய்யா
அவள் முத்தம் மொத்தம் பொய்யா
எனக்காய் துடித்தாலே அது பொய்யா
கனவுகள் நிலைவதும்
கனவுகள் கலைவதும்
தினம் தினம் நிகழ்வதடி
ஒரு யுக நினைவினை நொடியினில்
உடைப்பது கொடுமையின் கொடுமையடி
பிள்ளைப்போல் சிறு பிள்ளைப்போல்
என் நெஞ்சம் கொண்டிருந்தேன்
முள்ளைப்போல் ஒரு முள்ளைப்போல்
அதில் உன்னை சுமந்திருந்தேன்
கிளையின்றி
காற்றின்றியே எங்கு வாசமோ
ஏ மலரே ஏன் இதழால் நீ பொய் பேசினாய்
வானின்றியே இங்கு தூரலா
ஏ முகிலோ ஏன் துளியாய் நீ பொய் பேசினாய்
அவள் விழியின் கண்மை உண்மை
அவள் இதழின் மென்மை உண்மை
அவள் பெண்மை கூட உண்மை
மெய்யே பொய் என்றால்
எது உண்மை
அவளையும் இசையையும் எனது இரு விழியென
உலகத்தை ரசித்திருந்தேன்
விழிகளில் பிழை இல்லை உலகமே விடுமென
இருண்டிட குழம்பி நின்றேன்
ஐம்புலன் என் ஐம்புலன்
உனை ஐயம் கொள்ளுதடி
நெஞ்சமோ என் நெஞ்சமோ
அதை ஏற்றிட மறுக்குதடி
எது உண்மை....
எது உண்மை....


Isai - Atho Vanile Nila Song Lyrics in Tamil

அதோ வானிலே நிலா போகுதே
எதை தேடி தேடி
அதை கேட்கலாம் துணையாகவே
என்னோடு வா நீ நீ
அதோ வானிலே நிலா
எதை தேடுதோ நிலா

அதோ வானிலே நிலா போகுதே
அதன் ஜோடி தேடி
தனக்கேற்ற ஒரு துணை யாரன
மலை மீது ஏறி

துணை கிடைத்தபின் துணை தேடினால்
சரி தானா கூறு
இணையான துணை சரியாயென
சரிபார்த்தல் நன்று

துணை கிடைத்தபின் துணை தேடினால்
சரி தானா கூறு
இணையான துணை சரியாயென
சரிபார்த்தல் நன்று

அதோ வானிலே நிலா போகுதே
எதை தேடி தேடி
அதோ வானிலே நிலா போகுதே
அதன் ஜோடி தேடி

நிலா மயங்குதே ஓ ஓ .......
நிலா மயங்குதே
பின்பு தயங்குதே
நிலா தயங்குதே
குளத்து நீருல கல்ல எறிஞ்சி
வளச்சி வளச்சி நெஞ்ச பிழிஞ்சி
திட்டம் போட்டு தீண்ட குழிச்சா தயங்குதே
நிலா தயங்குதே ஓ...
நிலா தயங்குதே
நிலா மயங்குதே
உன்ன பாக்க தயங்குதே

நெஞ்சு துண்டதானே நானும் கல்லா வீசினேன்
நீரில் வட்டம் போட்டு உனக்கு
வளையல் மாட்டினேன்
பேச்சு மட்டுந்தான் பெருசா இருக்கு
செயலில் சேட்டை
கண்ட நிலவோ மிரண்டு இருக்கு

உன் மிரளுற முழியையும் பாத்தேன்
அன்பு திரளுற மனசையும் பாத்தேன்
இந்த வளருர தேயிற பழக்கம் ஏழை
சொல்லு நிலவே ஓ....
வெள்ளி நிலவே
நில்லு நிலவே பார்த்து
சொல்லு நிலவே

அதோ வானிலே நிலா போகுதே
எதை தேடி தேடி
அதோ வானிலே நிலா போகுதே
அதன் ஜோடி தேடி

நிலவே......
நிலவே.....
நிலவே......
வெள்ளி நிலவே
துள்ளி துள்ளி துள்ளி வரும் நிலவே
நெஞ்சை கிள்ளி கிள்ளி கிள்ளி விடும் நிலவே
அள்ளி அள்ளி அள்ளி ஒளி வீசி வீசி
தினம் பேசும் நிலவே....
என் அன்னை அருள் பெற்ற நிலவே
இனி அன்பு தமிழ் பேசு நிலவே
எங்கள் நிலவே
வா நிலவே

நிலா தாக்குதே
ஓ நிலா தாக்குதே
எனை பார்க்குதே
ஓ நிலா தாக்குதே
வெட்க பார்வை நெஞ்சை கொளுத்த
கொழுத்த இதழில் இதழை அழுத்த
ஒரு முத்தம் தந்து தீய அணைக்க வா
நிலா ஓடி வா
ஓ நிலா ஓடி வா
முத்தம் கொடுக்க வா
ஓ நிலா ஓடி வா
வா வா வா வா

முத்தம் என்ன முத்தம்
என்னை மொத்தம் தருகிறேன்
சத்தம் இன்றி மிச்சம்
மேகம் மெத்தை விரிக்கிறேன்
மங்கை கழுத்தில் மாலை விழவும்
வேலை வரவும்
மடியில் விழுவேன்
மயக்கம் தருவேன்


நீ பௌர்ணமி ஆகிடும் போது
அந்திப் பனி விழும் மலர்களின் மீது
ஏ உயிரையும் உன் கழுத்துல கயிறா மாட்டுவேன்
மாலை சூட்டுவேன்
நிலவே மாலை சூட்டுவேன்
மாலை சூட்டுவேன்
உன்னை மனதில் கூட்டுவேன்
அதை கேட்கலாம் துணையாக
என்னோடு வா நீ நீ

அதோ வானிலே நிலா போகுதே
எதை தேடி தேடி
அதை கேட்கலாம் துணையாகவே
என்னோடு வா நீ நீ

அதோ வானிலே நிலா போகுதே
அதன் ஜோடி தேடி
தனக்கேற்ற ஒரு துணை யாரன
மலை மீது ஏறி
தனக்கேற்ற ஒரு துணை யாரன
மலை மீது ஏறி


Isai - Isai Veesi Song Lyrics in Tamil

இசை வீசி நீ தேடு திசை மாறி
நான் கூட அசையாமல் உலகம் பார்க்கும்
இலை ஒன்றை நீ நீக்க இமைக்காமல்
நான் பார்க்க இழுத்தாயே உயிரை கொஞ்சம்
ஆயிரம் கோடி ஆசை இங்கே
ஆயினும் எந்தன் நெஞ்சம் சத்தத்தை
இசை வீசி நீ தேடு திசை மாறி
நான் கூட அசையாமல் உலகம் பார்க்கும்
ஏன் எதனால் புதிதாய் மயக்கம்
முழுதாய் தொலைந்தேன் முதல் பார்வையிலே
நிலை ஒன்றை நீ நீக்க இமைக்காமல் நான் பார்க்க
இழுத்தாயே உயிரைக் கொஞ்சம்


மனதின் குழியில் துளிகள் பறித்து
உனது இசையில் பாடினேன்
கனவை கலைக்க துளிகள் தெளிக்க
முகில்கள் தேடி ஓடினேன்.........
இசை வீசி நீ தேடு திசை மாறி
நான் கூட அசையாமல் உலகம் பார்க்கும்

நான் அறிஞ்ச தோலை
நீ உறித்த வேளை
மனதின் துகிலை கலைந்தாலே
ஆடையற்ற என் நெஞ்சை
பார்வை கொண்டு போத்தி
நெருப்பை அடைத்து பிணைத்து
உள்ளம் எனைக் கொள்ளை கொல்ல
இசை வீசி நீ தேடு திசை மாறி
நான் கூட அசையாமல் உலகம் பார்க்கும்
இலை ஒன்றை நீ நீக்க இமைக்காமல்
நான் பார்க்க இழுத்தாயே உயிரை கொஞ்சம்
மலர்கள் திறக்கும் குளிர்கள் பிடிக்கும்
இவளின் துடிப்பும் பிடித்தாயடா
சிறகின் சிரிப்பில் இசைகள் பறித்தாய்
இவளின் சிரிப்பும் பறித்தாயடா



Isai - Puthandin Song Lyrics in Tamil

நியூயியர்........
நியூயியர்........
நியூயியர்..........

விஸ் யு ஹேப்பி நியூயியர்.......
புத்தாண்டின் முதல் நாள் இது
புதிதான இசை பூத்தது
ஒலி வெள்ளம் வானத்தை தாக்குது..........
நான் என்பது நாம் என்றானது
நாம் என்பது நாடு என்றானது
வரும் நாளும் நமதென்றே ஆனது.........
பூமி முழுதும் வெடிகள் வெடிக்க
கோடி இதயம் இணைந்து துடிக்க
காலம் புதிதாய் கதவு திறக்க
நேற்றின் வலியை உலகம் மறக்க
வாழ்த்து அலைகள் வானைக் கிழிக்க
ஆழ்ந்து உறங்கும் கடவுள் விழிக்க
தாழ்ந்து இறங்கி எனக்குள் குதிக்க
ஊனும் உயிரும் இசையில் ஒலிக்க 
வா புத்தாண்டே பேரின்பங்கள் கொண்டேன்
கொண்டாடும் இந்நாளில் தந்தோமே பூச்சென்டே

பழங்கதைகளை பேசி பேசி  
மனம் முழுவதும் தூசி தூசி
அதை தொடைத்திட யோசி யோசி
புது கனவுகள் யாசி யாசி
உழைப்பினில் உண்மை வைத்தால்
உண்மையில் உழைப்பு வைத்தால்
உழைப்பினில் உயர்வு தோன்றும்
உயர்வான பாதை தோன்றும்
புதிய வழிகளைக் கண்டதனால்
நேற்று நமதல்லவா.........
புதிய வழிகளைக் கொண்டதனால்
இன்றும் நமதல்லவா.........
சிறு சிறு கண்ணில்
புதுக்கனவுகள் கண்டாள்
நாளை நமதல்லவா...........
நாளை நமதல்லவா...........
நாளும் நமதல்லவா............
கால நதியை ஆள நினைத்தோம்
நீந்திக் கடக்க நெஞ்சம் துடித்தோம்
வானத்திரையில் வண்ணம் தெளித்தோம்
பூமி முழுதும் பூக்கள் விரித்தோம்
புத்தாண்டின் முதல் நாள் இது
புதிதான இசை பூத்தது
ஒலி வெள்ளம் வானத்தை தாக்குது..........

 நான் என்பது நாம் என்றானது
நாம் என்பது நாடு என்றானது
வரும் நாளும் நமதென்றே ஆனது.........
பூமி முழுதும் வெடிகள் வெடிக்க
கோடி இதயம் இணைந்து துடிக்க
காலம் புதிதாய் கதவு திறக்க
நேற்றின் வலியை உலகம் மறக்க
வாழ்த்து அலைகள் வானைக் கிழிக்க
ஆழ்ந்து உறங்கும் கடவுள் விழிக்க
தாழ்ந்து இறங்கி எனக்குள் குதிக்க
ஊனும் உயிரும் இசையில் ஒலிக்க
வா புத்தாண்டே பேரின்பங்கள் கொண்டேன்

கொண்டாடும் இந்நாளில் தந்தோமே பூச்சென்டே