Showing posts with label Anegan Songs Lyrics in Tamil. Show all posts
Showing posts with label Anegan Songs Lyrics in Tamil. Show all posts

Monday, November 10, 2014

Anegan - Yolo - You Only Live Once Song Lyrics in Tamil

யோலோ யோலோ

போதும்டா சாமி உங்க நெடுவை போராட்டம்
காஞ்சி போன செடிக்கு தேவை நிறைய நீரோட்டம்
கடி நரி ஒன்னு கலக்கட்டா
காலன் ஜஸில் குழிக்கட்டா
ஆலும் வேலும் ஓடும் ஊரில் வாழ்ந்து பாப்போமா
ஆடி பாடி ஓடி களைக்காதே
கொஞ்சம் கூட அது சலிக்காதே
இன்று போய் நாளை வந்தால்
எதுவும் கிடைக்காதே

யோலோ யோலோ

யோலோ யோலோ

யோலோ யோலோ

யோலோ யோலோ

வெண்ணிலா வாழ்க்கையில் கொஞ்சம்
ஸ்பைச கலப்போமா
ஆசை எனும் கடலில் மூழ்கி
அமுதம் கடைவோமா
மனி மனி கொண்டு மடிக்கானும்
கண்ண மூடி சாட்ஸ் அடித்தாலும்
காதல் நேசம் ஒண்ணும் இல்லை
இன்பம் இன்று மட்டும்
போட்டு போட்டு தீய மூட்டாலும்
சிக்கி முக்கி போல உரசானும்
தலைக்கு மேல வெள்ளம் போனா
ஆகும் இந்த பாவம்

யோலோ யோலோ

யோலோ யோலோ

யோலோ யோலோ

யோலோ யோலோ

ஏய் ராசாத்தி முன்னாடி வாடி
இடுப்ப வளைச்சி நெளிச்சி மயக்கிப்புட்டு போடி
கண்ணுக்குள்ள நனைச்சு முத்தம் ஒன்றுதாடி
இன்னும் ஒருவாடி வரியாடி


அச்சம் மடம் நாணம் எதுக்குத்தானே
பெத்த மொழி இது அணைக்கத்தானே
தொட்டாலும் விட்டாலும் அது போகும் காத்துல

அச்சம் மடம் நாணம் எதுக்குத்தானே
பெத்த மொழி இது அணைக்கத்தானே

இது நம்ம நேரம்தான்

காற்று வீச
கண்கள் மூட
தோளில் சாய
என்னை தொலைத்தேனே
குளிரில் வேர்க்க
விரல்கள் கோர்க்க
இதழ்கள் சேர்க்க
போவோம் விண்மேலே

யோலோ யோலோ

யோலோ யோலோ

யோலோ யோலோ

யோலோ யோலோ

யோலோ யோலோ

யோலோ யோலோ


Anegan - Thodu Vaanam Song Lyrics in Tamil

தொடுவானம் தொடுகின்ற நேரம்
தொலைவினில் போகும்
ஆனால் தொலைந்துமே போகும்
தொடுவானமாய் பக்கமாகிறாய்
தொடும்போதிலே தொலைவாகிறாய்

தொடுவானம் தொடுகின்ற நேரம்
தொலைவினில் போகும்
ஆனால் தொலைந்துமே போகும்

இதயத்திலே தீ பிடித்து
கனவெல்லாம் கருகியதே
உயிரே நீ உருகும் முன்னே
கண்ணே கண்பேனோ
இலை மேலே பனித்துளி போல்
இங்கும் அங்குமாய் உலவுகின்றோம்
காற்றடித்தால் சிதறுகின்றோம்
பொண்ணே பூந்தேனே

வலி என்றால் காதலின் வலிதான்
வலிகளில் பெரிது
அது வாழ்வினும் கொடிது
உனை நீங்கியே உயிர் கரைகிறேன்
வான் நீலத்தில் எனை புதைக்கிறேன்

வலி என்றால் காதலின் வலிதான்
வலிகளில் பெரிது
அது வாழ்வினும் கொடிது
உனை நீங்கியே உயிர் கரைகிறேன்
வான் நீலத்தில் எனை புதைக்கிறேன்

இதயத்திலே தீ பிடித்து
கனவெல்லாம் கருகியதே
உயிரே நீ உருகும் முன்னே
கண்ணே கண்பேனோ
இலை மேலே பனித்துளி போல்
இங்கும் அங்குமாய் உலவுகின்றோம்
காற்றடித்தால் சிதறுகின்றோம்
பொண்ணே பூந்தேனே


காதல் என்னை பிளிகிறதே
கண்ணீர் நதியாய் வழிகிறதே
நினைப்பதும் தொல்லை
மறப்பதும் தொல்லை
வாழ்வே வலிக்கிறதே
காட்டில் தொலைந்த மழைத்துளிபோல்
கண்ணே நீயும் தொலைந்த்தென்ன
நீரினைத் தேடும் வேரினைப்போல
பெண்ணே உன்னை கண்டெடுப்பேன்
கண்கள் ரெண்டும் மூடும்போது
நூறு வண்ணம் தோன்றுதே
மீண்டும் கண்கள் பார்க்கும்போது
சோகம் சூன்யமாகுதே

சிறு பொழுது பிரிந்ததற்க்கே
பல பொழுது கதறிவிட்டாய்
ஜென்மங்களாய் பெண் துயரம்

அறிவாயோ நீ...................

Anegan - Roja Kadale Song Lyrics in Tamil

ரோஜா கடலே என் ராஜா மகளே
என் ஆசை கனியே வா தனியே

காதல் துணையே என் கண்ணின் மணியே
என் இன்னோர் உயிரே வா அருகே

பூக்களின் வில்லாய் புன்னகை கிள்ளாய்
பொன்னில் வார்த்தது மேனி

ம்........
பூச்செடியின் மேலே காற்றடித்தாலும்
உன் நெஞ்சில் தைக்குமோ ஆணி

வா வா அலைக்கடல் சிறுதுளி வா வா
பெண்ணே வா வா எரிமலை சிறு பொறி வா வா

வா வா அலைக்கடல் சிறுதுளி வா வா
கண்ணா வா வா எரிமலை சிறுபொறி வா வா

உளி கொண்டு எய்தாலும் ஒளி என்றும் தேயாது
அதுபோல் நம்காதல் மானே.......

ரோஜா கடலே என் ராஜா மகளே
என் ஆசை கனியே வா தனியே

காதல் துணையே என் கண்ணின் மணியே
என் இன்னோர் உயிரே வா அருகே

செவ்வாய் குயிலே பொன் செவ்வேல் விழியே
என் செவ்வால் கிளியே வா வெளியே
நீர் வாழ் குழலே கண் நேர்காண் எழிலே
என் மார்மேல் மயிலே வா வெளியே

ஆட்படைக் கொண்டு தாக்கிய போதும்
வானம் வளைவதும் இல்லை
ஆட்படைக் கொண்டு ஆர்ப்பரித்தாலும்
வேட்டை அழிவதும் இல்லை
போவோம் நிலம் விட்டு நிலவுக்கு
போவோம்
இனி வாழ்வோம் உயிருக்கு உயிர் தந்து
வாழ்வோம்
கண்டங்கள் விண்டாலும் மண்டங்கள் விண்டாலும்
நெஞ்சங்கள் மாறாது வா வா

செவ்வாய் குயிலே பொன் செவ்வேல் விழியே
என் செவ்வால் கிளியே வா வெளியே
நீர் வாழ குழலே கண் நேர்காண எழிலே
என் மார்மேல் மயிலே வா வெளியே


பருவச்சிட்டே பவள திட்டே
இதழைத் தந்தால் எதையும் தருவேன்

புகழின் மையா புழுகுப்பையா
சிறு போர் வந்தால் என்னை மறப்பாய்

வில்லும் அம்பும் சேர்ந்தாலும்
சேர்ந்தே வாழ்வதும் இல்லை

சொல்லும் பொருளும் ஆனோமே
என்றும் பிரிவே இல்லை

வா வா அலைக்கடல் சிறுதுளி வா வா
பெண்ணே வா வா எரிமலை சிறு பொறி வா வா

வா வா அலைக்கடல் சிறுதுளி வா வா
கண்ணா வா வா எரிமலை சிறுபொறி வா வா

கண்டங்கள் விண்டாலும் மண்டங்கள் விண்டாலும்

நெஞ்சங்கள் மாறாது வா வா

Anegan - Deivangal Ingae Song Lyrics in Tamil

தெய்வங்கள் இங்கே திரவியம் இங்கே
மழலை பேசும் மழை எங்கே
மாமலை இங்கே மணிச்சிகை இங்கே
மஞ்சள் சிந்தும் வெயில் எங்கே
மனமெல்லாம் சிறகே
உலகெல்லாம் உறவே

மனமெல்லாம் சிறகே
உலகெல்லாம் உறவே


சாலைகள் மாறும் பாதங்கள் மாறும்
வழித்துணை நிலவு மாறாதே
நதிக்கரை மாறும் கடற்கரை மாறும்
காதலின் வருகை மாறாதே
கலையாத கனவே
கலையாத வரமே
கலையாத கனவே
கலையாத வரமே



Anegan - Danga Maari Oodhari Song Lyrics in Tamil

தங்கமாரி ஊதாரி
புட்டுகின்ன நீ நாரி

ரூட் எடுத்து கோடு போட்ட
கோடு மேல ரோட்ட போட்ட
ரோட்டு மேல ஆட்டம் போட்ட
ஆட்டம் போட்டு ஆள போட்ட

அழுக்கு மூட்ட மீனாட்சி
மூஞ்ச கழுவி நாளாச்சி

ஊத்த பல்ல விளக்காம
சோத்த தின்னுது காமாட்சி
பிகர் கிட்ட மாட்டிகின்னா
நின்னுடும்டா ஓன் மூச்சி

ஆடபோன மங்காத்தா
தொரத்தின் வருது எங்காத்தா

நாத்தம் புடிச்ச நாஷ்டாக்கட
துண்ணாமத்தான் ரெண்டா உட
ஆத்தா போட்ட ஆம வடை
வாங்கி துண்ணுட்டு சும்மா கிட

திருடாத பொருள நான் எடுத்துடுவேன் விரல
நீ தூக்காதாடா பொருள உன்னை அடிச்சுடுவேன் மெர்ள

ஆர்தார் உர்தார் தெர்தாலன நான் ஆளாகிட்டேன்
ஒரு சிட்டா கைய போட்டு தள்ளி பேர வாங்கிட்டேன்
ஆப்புனன்டா ஆளே இல்ல சோலோ ஆயிட்டேன்
நான் முன்னே போல இல்ல ரொம்ப மாறிட்டேன்

எ அசோக்கு ஈசோக்கு
கானா பாடும் எந்த சோக்கு

டேய் மச்சான்

சுண்ட கஞ்சி பட்ட தண்ணீ ரொம்பனுதான்
குடிச்சான் பன்னி

அண்டா குண்டா அடகு வச்சி
சாராயத்தா ஃபுல்லா குடிச்சி
பொண்டாட்டிய மூஞ்ச உடைச்சு
கெடுத்துக்காத லைஃப்ப மச்சி

துட்டு இருந்தா காஜா பீடி
துட்டில்லாட்டா துண்டு பீடி

கஞ்சா கிஞ்சா அடிச்சிகினு
வலி வலினு வலிச்சிக்கினு
பொறுக்கி பேர வாங்கிகினு
உடம்ப வீணா கெடுத்துகினு

கண்ணாலந்தான் பன்னிக்கினு
செட்டப்பையும் வச்சிக்கினு

பொண்டாட்டிய கழுவிவிட்டு
புள்ளங்கள மறந்துவிட்டு
இருக்காதடா வெக்கங்கெட்டு
போயிடுவ மானங்கெட்டு

பல்லாணக் கை ரேகா
அது லுக் விடும் சோக்கா
ஆக்கிடும்டா போக்கா
நீ கழண்டுகிடா நேக்கா

பொண்ணுங்கள கேவலமா
எண்ணாத மச்சி
ஓன் கூட வந்து புறக்கலையா
அக்கா தங்கச்சி
நல்ல பொண்ணு தேடி வரும்
உன்ன நினைச்சு
நீ அந்த பொண்ண மனசவிட்டு
மாறாதே கட்சி

கண்டுகிடல பார்வதிய
மதிக்கலடி மாலதிய
தள்ளிவிட்டேன் ரேவதிய
ஓடவிட்டேன் கோமதிய

ஃபிகருங்க கொடுத்துடுமே டேக்காதான்
நான் மாட்டிகாம கலண்டுகின்னேன் நேக்காத்தான்
இவ பார்த்ததுமே ஆகிபுட்டேன் சீக்காதான்
என்ன மயக்கிபுட்டு ஆக்கினியே பேக்காத்தான்

கண்ண கண்ண உருட்டிகினு
புருவத்த தான் சுருக்கிக்கினு
பொட்டு பூ வச்சிகினு புடவையத்தான் கட்டிகினு
கண்ணால வலை விரிச்ச கண்ணம்மா
உன் கண்ணுவுட்ட கன்னிப் பையன் நானம்மா
உன் காதலத்தான் தப்புனு சொல்லம்மா
நீ சொல்லாக்காட்டி செத்த புணம் நானம்மா

டேய் தங்கமாரி

தங்கமாரி ஊதாரி
புட்டுகின்ன நீ நாரி


ரூட் எடுத்து கோடு போட்ட
கோடு மேல ரோட்ட போட்ட
ரோட்டு மேல ஆட்டம் போட்ட
ஆட்டம் போட்டு ஆள போட்ட

அழுக்கு மூட்ட மீனாட்சி
மூஞ்ச கழுவி நாளாச்சி

ஊத்த பல்ல விளக்காம
சோத்த தின்னுது காமாட்சி
பிகர் கிட்ட மாட்டிகின்னா
நின்னுடும்டா ஓன் மூச்சி

ஆடபோன மங்காத்தா
தொரத்தின் வருது எங்காத்தா

நாத்தம் புடிச்ச நாஷ்டாக்கட
துண்ணாமத்தான் ரெண்டா உட
ஆத்தா போட்ட ஆம வடை
வாங்கி துண்ணுட்டு சும்மா கிட

திருடாத பொருள நான் எடுத்துடுவேன் விரல
நீ தூக்காதாடா பொருள உன்னை அடிச்சுடுவேன் மெர்ள

ஆர்தார் உர்தார் தெர்தாலன நான் ஆளாகிட்டேன்
ஒரு சிட்டா கைய போட்டு தள்ளி பேர வாங்கிட்டேன்
ஆப்புனன்டா ஆளே இல்ல சோலோ ஆயிட்டேன்

நான் முன்னே போல இல்ல ரொம்ப மாறிட்டேன்

Anegan - Aathadi Aathadi Song Lyrics in Tamil

ஆத்தாடி ஆத்தாடி
செம்பருத்தி பூக்காரி
ஆசப்பட்டு பூத்திருப்பா வா
உன் ராசாத்தி ராசாத்தி
ரங்கோனுக்கு ராசத்தி
ராப்பகலா காத்திருக்கா வா
இது முதன் முதலாய் சிலுசிலுப்பு
முதுகுத்தண்டில் குறுகுறுப்பு
முழுவிவரம் எனக்கு சொல்வாயா.......
என் அடி மனசில் சுகம் இருக்கு
அடி வயித்தில் பயம் இருக்கு
அதுக்கு மட்டும் மருந்து சொல்வாயா......
ஆத்தாடி............

ஆத்தாடி ஆத்தாடி
செம்பருத்தி பூக்காரி
ஆசப்பட்டு பூத்திருப்பா வா
உன் ராசாத்தி ராசாத்தி
ரங்கோனுக்கு ராசத்தி
ராப்பகலா காத்திருக்கா வா

நீ மகுடத்தில் வைரக்கல்லு
நானோ மழபெஞ்ச உப்புக் கல்லு
உன்ன தொடவோ விரல் படவோ
ஒரு பொருத்தும் எனக்கேது

நான் தரமான தங்கக்கட்டி
நான் தகரத்த கட்டிக்கிட்டேன்
என்னை அடிக்க காத்துகிடக்க
உன்ன போல ஆளு ஏது

ஆசைகள் இருந்தாக்கூட
மனம் மசியாது
ஆத்துல விழுந்தாக் கூட
நிழல் நனையாது

உள்ளுக்குள் உள்ள கிறுக்கு
உன்ன சும்மா விடாது.........


ஆத்தாடி ஆத்தாடி
செம்பருத்தி பூக்காரி
ஆசப்பட்டு பூத்திருப்பாளா
என் ராசாத்தி ராசாத்தி
ரங்கோனுக்கு ராசத்தி
ராப்பகலா காத்திருப்பாளா

கடிகாரம் முள்ளபோல
என்ன தினந்தோறும் சுத்திவாயா
என்ன துரத்து தூள் பறத்து
இந்த அள்ளிப்பூ கிள்ளிப்போயா

புளி மூட்டத்தூக்கிப் பாத்தேன்
இப்ப பூ மூட்ட தூக்கப் போறேன்
இளஞ்சிறுக்கி உன்ன முறுக்கி
அருணாக்கயிறாக்கப்போறேன்

இடுப்புல கயிறா கிடக்க மனந்தான் ஏங்குதையா
கழுத்துல கயிறா வந்தா நித்தமும் சொந்தமையா
விழியால் தொட்ட அழகே
இந்த ஆச மாறாதே........

ஆத்தாடி ஆத்தாடி
செம்பருத்தி பூக்காரி
ஆசப்பட்டு பூத்திருப்பா வா
உன் ராசாத்தி ராசாத்தி
ரங்கோனுக்கு ராசத்தி
ராப்பகலா காத்திருக்கா வா

இது முதன் முதலாய் சிலுசிலுப்பு
முதுகுதண்டில் குறுகுறுப்பு
முழுவிவரம் எனக்கு சொல்வாயா.......

என் அடி மனசில் சுகம் இருக்கு
அடி வயித்தில் பயம் இருக்கு
அதுக்கு மட்டும் மருந்து சொல்வாயா......